2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

யாழ், கிளியில் வெடிபொருட்கள் மீட்பு

Kanagaraj   / 2013 பெப்ரவரி 06 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மிதிவெடி அகற்றும் பிரிவினரால் 3 இலட்சத்து 52 ஆயிரத்து 577 வெடிக்காத வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு மிதிவெடி செயற்பாட்டு அலுவலர் முருகதாஸ் தெரிவித்தார்.

இதில் யாழ் மாவட்டத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஜனவரி 20ஆம் திகதி வரை 1 இலட்சத்து 42 ஆயிரத்து 146 வெடிக்காத வெடிபொருட்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஜனவரி வரை 2லட்சத்து 10 ஆயிரத்து 431 வெடிக்காத வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இரண்டு மாவட்டங்களிலும் 1 இலட்சத்து 82 ஆயிரத்து 971 மிதிவெடிகளும், 732 வாகன எதிர்ப்பு மிதிவெடிகளும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன் யாழ் மாவட்டத்தில் இதுவரை 90.92 வீதமான நிலப்பிரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் இனனமும் 9.3 வீதமான பகுதியில் மிதிவெடி அகற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X