2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

விசாரணைக்கு வருமாறு சிறிதரன் எம்.பிக்கு அழைப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று புதன்கிழமை அழைப்பு விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தனது  அலுவலகத்தில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் வெடிமருந்து மற்றும் ஆபாச பட இறுவட்டுக்கள் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்ளவேண்டியுள்ளதால் எதிர்வரும் 15ஆம் திகதி காலை 10 மணிக்கு கொழும்பு, புலனாய்வுத் தலைமையகத்தின் 2 ஆம் மாடியிலுள்ள 1ஆவது பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அன்றைய தினம் தெல்லிப்பளை பிரதேசத்தில் நடைபெறவுள்ள அடையாள உண்ணாவிரதப்போராட்டம் காரணமாக தன்னால் சமூகம் தரமுடியாது என்று தெரிவித்துள்ளதாகவும் இதனால் எதிர்வரும் 18ஆம் திகதி சமூகம் தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X