2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட இளைஞர் கைது

Super User   / 2013 ஜூலை 24 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் இளைஞரொருவரை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். ஆணைக்கோட்டை, ஆறுகால் மடம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் அச்சகம் ஒன்றில் வைத்து போலி நாணயத்தாள்கள் அச்சிடும் போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை கைதுசெய்யப்படும் போது பெருமளவிலான போலி நாணயத்தாள்களையும் குற்றத்தடுப்பு பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபரினால் அச்சிடப்பட்ட போலி நாணயங்களை நண்பர்கள் மூலம் யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் பாவனைக்கு உட்படுத்தியுள்ளமையும் விசாரணையின் போது கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில், வங்கி ஊழியர்கள் இருவர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்பும் போது 500 நாணயத்தாள்களுடன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸாரிடம் வினவியபோது, "போலி நாணயத்தாள்களுடன் இளைஞரை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளமையினால் மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் மேற்கொள்வர்" என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--