2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

பாதுகாப்பு படையினரால் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி திறப்பு

Kogilavani   / 2013 ஜூலை 25 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
, சுமித்தி தங்கராசா

513 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மஞ்சி பிஸ்கட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் யாழ்.மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட விநாயகர் முன்பள்ளிக் கட்டிடம்  இன்று வியாழக்கிழமை  திறந்து வைக்கப்பட்டது.

இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக 51 ஆவது படைப்பிரின் கட்டளைத்தளபதி பிரிக்கேடியர் அபேநாயக்க கலந்துகொண்டு முள்பள்ளிக்கட்டிடத்தினை திறந்து வைத்ததுடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டித்திறப்பு விழாவில் 512 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி அஜித் பல்லேகலா, 513 ஆவது படைப்பிரிவின் தளபதி அரமசிங்க, பிரதேச செயலர் முரளிதரன், மஞ்சி நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X