2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

ஈ.பி.டி.பி கட்சியின் வேட்பாளர்களின் விபரம்

Kogilavani   / 2013 ஜூலை 29 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக கட்சியின் உயர் மட்டத்தினர் தெரிவித்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேட்பாளர் தெரிவு நடைபெற்று நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடமாகாண சபையின் முதன்மை வேட்பாளராக சின்னத்துரை தவராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்,  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி அமைப்பாளர் எஸ்.பாலகிருஸ்ணன், ஈழ.மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர், ஏ.சூசைமுத்து, ஈழ. மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சுந்தரம் திவகர்லால், ஆறுதல் நிறுவன இணைப்பாளர் ஏ.அகஸ்டின், சிகரம் ஊடக நிறுவன பணிப்பாளர் கோ.றுஷhங்கன், பனை தென்னை வள கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.கணேசன், ஆகியோர் செய்யப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உயர் மட்டத்தினர் தகவல் தெரிவித்தனர்.

வேட்பு மனு தாக்கல் ஓரிரு தினங்களில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உயர் மட்டத்தினர் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X