2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வேட்பாளர் அச்சுறுத்தப்படுதல் நிறுத்தப்பட வேண்டும்: சுரேஷ்

Kogilavani   / 2013 ஜூலை 30 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண சபை தேர்தலை குழப்பும் நடவடிக்கையில் இராணுவ புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், இராணுவ புலனாய்வாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாகவகச்சேரி வேட்பாளர் சட்டத்தரணி சயந்தனின் இல்லத்திற்கு மூன்று தடவைகள் சென்று விபரம் திரட்டியதுடன் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதன்போது, இராணுவ புலனாய்வாளர்களுக்கு சட்டத்தரணி சயந்தன் தேர்தல் விபரங்களை திரட்டுவதற்கு இராணுவ புலனாய்வாளர்களான உங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், இனிமேல் எனது இல்லத்திற்கு வருகை தரக்கூடாதென்றும் கூறியுள்ளார்.

அதனைத் தொடாந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இவ்விடயம் தொடர்பாக சட்டத்தரணி அறிவித்துள்ளார்.

இராணுவ புலனாய்வாளர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் தேர்தல் சட்டத்தினை மீறும் செயலாகும். இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக இராணுவ புலனாய்வாளர்கள் நிறுத்த வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வடமாகாண சபை தேர்தல் நீதியான முறையில் நடக்குமென உறுதியளித்துள்ள நிலையில், இராணுவ புலனாய்வாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது ஜனநாயகத்தினை மீறும் செயல்.

இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பதற்கு இராணுவ புலனாய்வாளர்களுக்கு அதிகாரம் இல்லை. அச்சுறுத்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கும், பொலிஸ்மா அதிபருக்கும் முறைப்பாடு செய்துள்ளதுடன், தூதுவராலயங்களுக்கும் முறைப்பாடு செய்யவுள்ளோம்'  என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .