2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

'நாய்' என்று பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்: தங்க முகுந்தன்

Kogilavani   / 2013 ஜூலை 30 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


'என்னை நாய் என்று பேசியதற்காக தமிழரசு கட்சியின் உறுப்பினர் குலநாயகம் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தங்க முகுந்தன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற பத்திரிகையாளர்  சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,  

'தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை தந்தை செல்வா சதுக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இருந்த காலத்தில் கொழும்பில் வைத்து உறுப்பினர் ஒருவர் நாய் என்று பேசினார். இவ்வாறு நாய் என பேச்சு வாங்கியது இரண்டாவது தடவையாகும்.

தன்னை நாய் என்று பேசிய தமிழரசு கட்சியின் உறுப்பினர் குலநாயகம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காத பட்சத்தில், தமிழரசு கட்சியின் குளறுபடிகள் அனைத்தினையும் வெளியிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்' என்று அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--