2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

கோட்டாவின் புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம்: சுசில்

Kogilavani   / 2013 ஜூலை 31 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

'தேர்தல் பிரசார நடடிக்கைகளின்போது பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுத் தளபதியின் புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம்' என்று  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் அமைச்சர் சுசில் பிரேமஜயந் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.கிறீன் கிராஸ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிப்பை அடுத்து முஸ்லிம் வேட்பாளர் எம்.எம்.சீராசை சந்தித்து அமைச்சர் கலந்துரையாடினார்.

இதன்போது அவர், 'தேர்தல் சுவரொட்டிகளில் பாதுகாப்பு செயலாளரின் புகைப்படத்தினைப் பயன்படுத்தியமையே வேட்பாளர் தெரிவின் இழுபறி நிலைக்கு காரணமாக அமைந்ததாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை,  இனிவரும் காலங்களில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியின் புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் தற்போது பாதுகாப்பு செயலாளரின் புகைப்படத்துடன் உள்ள தேர்தல் சுவரொட்டிகளை அகற்றுமாறும் அவர் இதன்போது தெரிவித்தார்.

  Comments - 0

  • jeyarajah Thursday, 01 August 2013 04:17 AM

    அமைச்சர் அவர்களே, குருணாகலையில் ஓர் இராணுவ வீரர் தேர்தலில் போட்டி. அவர் கோட்டபாய ராசபக்ஷவின் படத்தை தன் படத்துடன் சேர்த்து புகைப்படம் எடுத்து தேர்தல் பிரசாரம் செய்கின்றார். போய்ப் பார்க்கவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--