2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

யாழ். இளைஞரை காணவில்லை

Kogilavani   / 2013 ஜூலை 31 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

யாழ்.கொக்குவில் பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொக்குவில் பிடாரி அம்மன் கோயிலடியைச் சேர்ந்த தேவாராசா தினேஸ் என்ற 26 வயது இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக புதன்கிழமை (31) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவரை கடந்த 4 மாதங்களாக காணவில்லை என அவரது சகோதரன் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்த இவரை தாயார் திட்டியதாகவும் அப்போது கடைக்குக் செல்வதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 4 மாதங்களாக பல்வேறு இடங்களில் இவரை தேடிய போதும் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் அந்த முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X