2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

நலன்புரி முகாமில் வசிப்பவர்கள் கீரிமலையில் குடியேற்றம்: டக்ளஸ் தேவானந்தா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா    


நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அருகான காணிகளில் மீளக் குடியேற்றுவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துள்ளார்.

வலிகாமம் வடக்கு பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக துறைசார்ந்தோருடன் கலந்துரையாடினார்.

இதன்பிரகாரம் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களில் ஒருதொகுதியினர் கீரிமலை மாவிட்டபுரம் பிரதான வீதியின் மேற்குப் புறமாக உள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அருகான காணிகளில் மீள்குடியேற்றம் செய்வது தொடர்பில் அமைச்சர்; ஆராய்ந்தார்.

அத்துடன், அங்கு வாழ்ந்து வரும் மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் அமைச்சர்; கவனம் செலுத்தினார்.

காங்கேசன்துறை மேற்கின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டதுடன், மீளக்குடியேறிய மற்றும் மீளக்குடியமரவுள்ள
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தொடர்பில் குறிப்பாக வடக்கின் வசந்தம் ஊடாக மின்சாரத்தையும், குடிநீர், வீதிப்புனரமைப்பு, மலசலகூடம் உள்ளிட்ட வசதிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடினார்.

இதனிடையே, கீரிமலை செம்மன் வாய்க்கால் இந்துமயானத்தை எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னதாக படைத்தரப்பினரிடமிருந்து மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்; அதேவேளை தற்காலிக பாதையை அமைப்பதற்கும் செம்மன் வாய்க்கால் முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு மின்சாரத்தை வழங்குவதற்கும் அமைச்சர் துறைசார்ந்தோருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் நகுலேஸ்வரம் புதிய கொலனி திட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்திய வீட்டுத்திட்டத்தையும் அமைச்சர் பார்வையிட்டதுடன், அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். 

இதன்போது ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன், வடமாகாண காணி ஆணையாளர் தயானந்தன், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறி மோகனன், ஈ.பி.டி.பியின் வலிகாமம் இணைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்), ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச இணைப்பாளர் ஐங்கரன் ஆகியோருடன் இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் உடனிருந்தனர.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--