2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

சுதந்திரமானதும் நீதியுமான தேர்தலை நடத்த அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா
 
சுதந்திரமானதும் நீதியுமான தேர்தலை நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   
 
இன்று வியாழக்கிழமை, மாவட்டச் செயலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வடமாகாண பிரதித் தேர்தல் ஆணையாளர் எஸ்.அச்சுதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
வடமாகாணத்தில் முதற்தடவையாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தவர்கள் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள காலத்தில் மாணவர்களிற்கான பரீட்சை மற்றும் நல்லூர் உற்சவம் என்பன நடைபெறவுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறுகளையும் ஏற்படுத்தாத வண்ணம் தங்கள் பிரசார நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 
இந்த தேர்தல் தொடர்பில் சர்வதேசத்தின் கண்காணிப்பு முக்கியமானதாக இருக்கின்றபடியினால் சுதந்திரமானதும் நீதியுமான தேர்தலை நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
 
அத்துடன் தேர்தல் காலத்தில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்கு யாழ். மாவட்டச் செயலகத்தில் இணைப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு தேர்தல் வன்முறைகள் தொடர்பாக முறையிடலாம் என்றும் விரைவில் பிரிவு ரீதியாக முறைப்பாட்டு அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X