2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

பொது பூங்காவின் பெயர் பலகை உடைப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்
 
வல்வெட்டித்துறை தீருவிலில் உள்ள பொது பூங்காவின் பெயர் பலகை இராணுவத்தால் உடைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இன்று ஞாயிற்றிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமசந்திரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வல்வெட்டித்துறை நகரசபைக்;குச் சொந்தமான இந்த காணியின் விடுதலைப்புலிகளின்; நினைவுத்தூவி  ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இது தங்களுக்கு சொந்தமானது என்று பயங்கவாத தடுப்பு பிரிவினரால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்து.

நீதிமன்றத்தின் தீர்ப்பு இவர்களுக்கு பாதகமான முறையில் வந்ததையடுத்து நகர சபைத் தலைவரின் வீட்டினுள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அவரின் மடிக்கணினியியை எடுத்துச் சென்றனர்.

இதனையடுத்து குறித்த தீருவில் பிரதேசத்தில் வல்வெட்டித்துறை நகர சபையினால் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இந்த பூங்காவி  பெயர் பலகை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது இவ்வாறு பொது மக்கள் செய்யமாட்டார்கள் இதனை இராணுவத்தினரே செய்திருக்கிறார்கள் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X