2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

அரியாலையில் வெடிபொருள் வெடித்ததில் பரபரப்பு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா
 
குப்பைக்கு தீ மூட்டியபோது குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்ததில் அரியாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
அரியாலை பூம்புகார் 3ஆம் வட்டார பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்த குப்பைகளை காணி உரிமையாளர் தீ முட்டிய வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
அச்சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.
 
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த இப்பகுதி 2010ஆம் ஆண்டில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .