2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலைக் கட்டிடம் இடிந்தது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}-நா.நவரத்தினராசா


மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையின் பழைய கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளமையால் வகுப்புக்கள் யாவும் தற்போது மர நிழலில்  நடைபெறுகின்றன. 

கடந்த வாரம் குறிப்பிட்ட கட்டிடம் சிறிதாக உடையத் தொடங்கியதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை (15) இந்தக் கட்டிடம் முற்றாக உடைந்துள்ளது.

இந்தக் கட்டிடத்தில் நடத்தப்பட்டு வந்த வகுப்புக்களை மாற்றுவதற்கு வேறு கட்டடிடங்கள் இன்மையால்,  இந்த வகுப்புக்கள்  யாவும் மர நிழலில்;  நடத்தப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றார்கள்.

வலிகாமம் கல்வி வலயம் இதற்கான உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என பாடசாலைச் சமூகத்தினர் தெரிவித்துள்ளது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--