2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கார் கடலுக்குள் பாய்ந்து விபத்து: நால்வர் தப்பினர்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 18 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ்.பண்ணைப் பாலத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலையிலிருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணிகள் நால்வர் கார் ஒன்றில் தீவுப்பகுதியில் பல இடங்களைப் பார்வையிட்ட பின்னர் யாழ் நகரிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இதன்போதே ,கார் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து அருகிலிருந்த பாதுகாப்புக் கட்டுக்களை உடைத்துக் கொண்டு கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காரினுள் இருந்த நால்வரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என்று தெரிவித்த யாழ்ப்பாணப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--