2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

காலாவதியான பொருட்கள் அழிப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மருதனார்மடம் சந்தியிலுள்ள வியாபார நிலையங்களில் காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

மருதனார்மடம் சந்தை பகுதியில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனையடுத்து, உடுவில் பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் உடுவில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது காலாவதியான மற்றும் பழுதடைந்த நிலையிலிருந்த நூடில்ஸ், பிஸ்கட், மிக்ஸர் பைக்கற்றுக்கள் உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் உடனடியாக அவை அழிக்கப்பட்டன. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளினை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--