2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு மேலும் இரு அறைகள்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு இரண்டு விசேட அறைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

மானிப்பாய், மல்லாகம் லயன்ஸ் கழகங்களின்; உதவியுடன் அமைக்கப்பட்ட மேற்படி அறைகள் நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

மேற்படி இரண்டு அறைகளில் ஒரு அறை பௌதீக சிகிச்சை செயற்பாட்டுக்கும் மற்றைய அறை புற்றுநோய் மருந்து சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படவுள்ளன.

புற்றுநோய்ப் பிரிவின் பதில் பொறுப்பதிகாரி வைத்திய நிபுணர் பி.நளாயினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மல்லாகம், தெல்லிப்பழைப் பிரதேசங்களின் லயன்ஸ் கழகங்களைச் சேர்ந்த எஸ்.ஆறுமுகநாதன், எஸ்.தங்கராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .