2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

யாழில் பெருமளவான இடங்களில் டெங்கு பரிசோதனை

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
 
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சண்டிலிப்பாய் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் சுமார் 7ஆயிரத்து 250க்கு மேற்பட்ட இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
மேற்படி சுகாதார அதிகாரி மேலும் தெரிவிக்கையில்,
 
யாழ். மாவட்டத்தில் மழை காலம் ஆரம்பமான நிலையில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டதினால் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் அவர்களின் சுற்றுச் சூழலை துப்பரவான முறையில் பேண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
 
இந்த வாரத்தில் 7ஆயிரத்து 50இற்கு மேற்பட்ட வீடுகள், 39 பாடசாலைகள், 62 அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 7 ஆயிரத்து 250 மேற்பட்ட இடங்கள் பார்வையிடப்பட்டுள்ளன.
 
மேற்படி பரிசோதனையின் போது 1600இற்கும் அதிகமான இடங்களில் டெங்கு பரவக் கூடிய அபாயமான நிலைமை காணப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் புகுதிகள் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டதுடன் அத்தகைய நிலையில் வைத்திருந்தவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டது.
 
பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுகள், கிராம அலுவலா்கள், சமூர்த்தி அலுவலர்கள், பட்டதாரிப் பயிலுநர்கள், சுகாதாரத் தொண்டர்கள், கிராமிய மட்ட சுகாதாரக் குழுக்கள், பொலிஸார், அரச சார்பற்ற நிறுவனங்களின், ஏனைய பிரதி நிதிகள் எனப் பலரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர் என அவர் மேலும் தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--