2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

உதவிக்கு வந்தவர் கைப்பையுடன் மறைந்தார்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

காணி துப்புரவு செய்வதற்காக உதவிக்கு வந்த ஒருவர் பெண்ணொருவரின் கைப்பையை அபகரித்துச் சென்றுள்ளார்.

யாழ். அச்சுவேலிப் பகுதியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இச்சம்பவம்; இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணொருவர் அச்சுவேலிப் பகுதியிலுள்ள தனது மகளின் காணியை துப்புரவு செய்துகொண்டிருந்தபோது,  காணி அமைந்துள்ள வழியாக வந்த  ஒருவர்; 'ஏன் நீங்கள் தனியாக கஷ;டப்படுகின்றீர்கள், நான் உங்களுக்கு உதவுகின்றேன்' எனக் கூறியுள்ளார்.

இருந்தும் இப்பெண் இவரின் உதவியை மறுக்கவே, நான் உங்களுக்கு உதவி செய்கின்றேன் என்று கூறிக்கொண்டு  வலுக்கட்டாயமாக தானும் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இப்பெண் தேநீர் அருந்துவதற்காக அருகிலுள்ள வீட்டிற்குச் சென்றபோது உதவி செய்ய வந்த நபர், மரத்தில் கொழுவியிருந்த இப்பெண்ணின் கைப்பையைத் அபகரித்துக்கொண்டு மதிலால் ஏறி ஓடி மறைந்துவிட்டார்.

15,000  ரூபா பணமும் வங்கிக் கடனட்டை,  கடவுச்சீட்டு ஆகியன கைப்பையில் காணப்பட்டுள்ளது.

தனது கைப்பை பறிபோன சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் அச்சுவேலி குற்ற ஒழிப்புப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .