2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

இளைஞனின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணம், நாராந்தனை வடக்கு, தம்பட்டி பகுதியிலுள்ள கிணறொன்றுக்குள்ளிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த மகாதேவன் பிரதீப் (23) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள மேற்படி இளைஞன், கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்தே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் இன்று காலையில் முகம் கழுவுவதற்காக கிணற்றடிக்கு சென்ற போது, கிணற்றடிக்கு அருகில் இருந்த பாசியில் சறுக்குண்டு கிணற்றுக்குள் வீழுந்துள்ளார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேற்படி இளைஞனின் சடலத்தினை யாழ். ஊர்காவற்துறை பொலிஸார் மற்றும் நீதிபதி எஸ்.எம்.மகேந்திரராஜா பார்வையிட்டதையடுத்து, சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--