2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கொள்ளையர்களினால் கொத்தப்பட்ட மாணவன் உயிரிழந்தார்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்
 
கொள்ளையர்களினால் கோடாரி கொத்திற்கு இலக்காகிய மாணவன், சிகிச்சை பலனின்றி நேற்று (07) மாலை உயிரிழந்துள்ளார்.
 
உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை (04) புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கோடாரியினால் கொத்திவிட்டு வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
 
இதில் காயமடைந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தாய் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.
 
தந்தையும் மகனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிடரிப்பகுதியில் கடுமையான காயமேற்பட்டிருந்த மகனான சண்முகநாதன் யதுர்ஷனன் (19) என்பவரே சிகிச்சை பலனின்றி நேற்று (07) மாலை உயிரிழந்துள்ளார்.
 
யதுர்ஷனன், யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி
வீட்டில் கொள்ளை: கோடரி வெட்டில் மூவர் காயம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .