2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற அறுவர் அகப்பட்டனர்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுவந்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் உட்பட  6 பேர் அகப்பட்டனர்.

கொழும்பிலிருந்து வந்த இலங்கை மின்சார சபையின் 10 பேர் அடங்கிய குழுவினரும்  அச்சுவேலிப் பொலிஸாரும் இணைந்து அச்சுவேலிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தமேனி, அச்சுவேலி வடக்கு, கதிரிப்பாய் உள்ளிட்ட இடங்களில் நேற்று சனிக்கிழமை  இரவு சோதனை  மேற்கொண்டனர்.

இதன்போது  சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்ததாகக் கூறப்படும் 6 பேரே அகப்பட்டதாக கொழும்பிலிருந்து வந்த இலங்கை மின்சார சபையின் குழுத் தலைவர் தெரிவித்தார்.

மேலும், சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று உங்கள் உயிர்களை நீங்கள் இழந்து விடாதீர்கள். மின்சாரம் பெற்றுக்கொள்வதற்கு இலகுவான வழிகள் இருக்கும்போது ஏன் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக் கொள்கின்றீர்கள் எனவும் கேட்டார்.

அரசாங்கம் 'திவிநெகும' திட்டத்தின் மூலம் வறிய  மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. இதன் மூலம் நீங்கள் உங்கள் உண்மையான நிலைமையை மின்சார சபைக்கு வெளிப்படுத்தினால் உங்களுக்கு மின்சாரம் கிடைக்குமெனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .