2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

காங்கேசன்துறை சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம்

Super User   / 2014 மார்ச் 23 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கர்ணன், ற.றஜீவன்


இலங்கையில் குற்றங்கள் குறைந்த மாகாணங்களாக 2013ஆம் ஆண்டு முறையே கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்கள் திகழ்ந்ததாக வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று (23) தெரிவித்தார்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையப்பகுதிகளைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கிடையிலான விசேட கூட்டம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (23) நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'சிவில் பாதுகாப்புக்குழுக்கள் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். இதன்மூலம் கிராமங்களில் குற்றச்செயல்கள் குறைவடைந்து சமாதான சூழ்நிலை ஏற்படும். சிவில் பாதுகாப்புக் குழுக்கள் இலங்கையிலுள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பூராகவும் காணப்படுகின்றது.

நான் 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் பொலிஸ்மா அதிபராக இருந்த போது இலங்கையிலுள்ள மாகாணங்களில் 66 சதவீதம் குற்றச்செயல்கள் குறைவடைந்த இரண்டாவது மாகாணமாக கிழக்கு மாகாணம் திகழ்ந்தது.

தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு 76 சதவீதமாக குற்றச்செயல்கள் குறைவடைந்து இலங்கையில் முதலாவது மாகாணமாக கிழக்கு மாகாணம் திகழ்ந்தது.

இங்கு சிவில் பாதுகாப்பு குற்றச்செயல் குறைவடைந்தமை போல வடக்கிலும் குற்றச்செயல்கள் குறைவடைந்து சுமூகமான சமாதான சூழல் உருவாக சிவில் பாதுகாப்பு குழுக்கள், பொலிஸார், இராணுவத்தினர், அரச உத்தியோகத்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்' என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, சிவில் பாதுகாப்புக்குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பூஜித பதிலளித்தார்.

இந்நிகழ்வில், கரவெட்டி பிரதேச செயலர் சண்முகநாதன் சிவசிறி, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ், மதகுருமார்கள், காங்கேசன்துறை, இளவாலை, தெல்லிப்பளை, பலாலி, அச்சுவேலி, வல்வெட்டித்துறை, நெல்லியடி, பருத்தித்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களின் அங்கத்தவர்கள் சுமார் 1000 மேற்பட்டோர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .