2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

காலாவதியான பொருட்கள் விற்ற வர்த்தகர்களுக்கு தண்டம்

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் விபரங்களைக் காட்சிப்படுத்தாமை போன்ற குற்றங்களுக்காக யாழ்.மாவட்டத்திலுள்ள 27 வர்த்தகர்களுக்கு 90,500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி தனசேகரம் வசந்தசேகரன் திங்கட்கிழமை (24) தெரிவித்தார்.

இம்மாதம் (மார்ச்) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில்போது 27 வர்த்தக நிலையங்களிலும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தமை மற்றும் விபரங்கள் காட்சிப்படுத்தப்படாமை போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டதாகவும் இவர்களுக்கு எதிராக  5 நீதிமன்றங்களில்; வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் குறித்த 27 வர்த்தகர்களுக்கும் 90,500 ரூபா தண்டம் நீதிமன்றங்களினால் விதிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .