2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மின் தாக்கி பெண் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 26 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

மின்சாரத் தாக்குதலுக்குள்ளான கொக்குவில், கோணாவிலைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தாய்  ல.நுவர்சிகா (வயது 27) என்பவர் புதன்கிழமை (26) உயிரிழந்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். 

மின் கட்டணம் செலுத்தாமையால் இப்பெண்ணின் வீட்டுக்குரிய மின் இணைப்பை  யாழ். மாவட்ட மின்சார சபையினர் செவ்வாய்க்கிழமை (25) துண்டித்தனர்.

இதனால், மேற்படி பகுதியில் ஒரு வளாகத்தில் இரண்டு வீடுகள் இருக்கின்ற நிலையில், தங்கள் வீட்டிற்கு தற்காலிகமாக மின்சாரம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பின்னாலுள்ள வீட்டிலிருந்து மின்சாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு குறித்த பெண் முயற்சி செய்தவேளையில் மின்சாரம் இவர் மீது பாய்ந்து இவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், இவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .