2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

வடமராட்சியில் உருகுலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2014 மார்ச் 27 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

வடமராட்சி உடுப்பிட்டி கம்பர் மலைப்பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் வியாழக்கிழமை (27) தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிபடையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றவேளை, அங்கு சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.

குறித்த சடலத்துடன் பெண்ணின் ஆடை இருப்பதனால் இது பெண்ணின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் கூறினர்

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .