2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

பாடசாலை நுழைவாயில் திறப்பு விழா

Kogilavani   / 2014 மார்ச் 27 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்

யாழ்.வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் 2.5 இலட்சம் ரூபா பெறுமதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வித்தியாலயத்தின் நுழைவாயில் புதன்கிழமை (26) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

வித்தியாலய பழைய மாணவர்களின் நிதியில் அமைக்கப்பட்ட இந்த நுழைவாயிலினை வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சிவபாதம் நந்தகுமார் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் வித்தியாலய அதிபர் சங்கரப்பிள்ளை திரவியராசா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவபீடப் பேராசிரியர்; மா.நடாராசசுந்தரம், முன்னாள் உயர் தொழிநுட்ப கல்லூரி பணிப்பாளர் க.கதிரமலை, வித்தியாலய ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .