2021 மார்ச் 03, புதன்கிழமை

பெண் வல்லுறவு; சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2014 மார்ச் 28 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்
யாழ்.துன்னாலை யாக்கரை மயானத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை (07) 19 வயது யுவதியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பாலச்சந்திரன் பிரபாகரனை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் வெள்ளிக்கிழமை (28) உத்தரவிட்டார்.

தென்மராட்சி வரணி இடைக்குறிஞ்சியினைச் சேர்ந்த 19 வயது யுவதியொருவர் கடந்த வெள்ளிக்கிழமை (7)  அதேயிடத்தினைச் சேர்ந்த இளைஞனுடன் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை முடித்து வீடு திரும்பும் போது மூன்று பேர் சேர்ந்த கும்பலால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் பாலச்சந்திரன் பிரபாகரன் என்ற நபர் சந்தேகத்தின் பேரில் கடந்த 12 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மேற்படி நபர் வெள்ளிக்கிழமை(28)  மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட யுவதிக்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரி யாழ்.மாவட்ட சமூக பொறுப்பாளர்கள் குழு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள்  'பாலியல் பலாத்கார குற்றவாளிகள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள்!', 'பாலியல் பலாத்காரக் கொலைகளை எப்போது இல்லாமல் ஆக்குவோம்?', 'நாம் ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடையவர்களாக செயற்படுகிறோமா?', 'மருந்துவ பரிசோதனை அறிக்கை பக்கசார்புடையதாக இருப்பது ஏன்?' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .