2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

சிறைக்கைதி மரணம்

A.P.Mathan   / 2014 மார்ச் 31 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த வைரவநாதன் நாதன் (33) என்ற சிறைக்கைதி சிறைச்சாலையில் வலிப்பு வந்தமையினால் நேற்று (30) மரணமடைந்துள்ளதாக யாழ். சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த சிறைக்கைதியின் சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை (28) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .