2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் நிலைய கட்டிடப் பணிகள் பூர்த்தியாகி வருகின்றது

Super User   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் 29கோடி 48இலட்சத்து 32ஆயிரத்து 695ரூபா 27சதம் செலவில்   யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தின் கட்டிட நிர்மாண வேலைகள் பூரணப்படுத்தப்பட்டு வருவதாக யாழ்.பொலிஸ் வட்டாரங்கள் இன்று (10) தெரிவித்தன.

இப்புதிய கட்டிடத்தினை மத்;திய பொறியியல் ஆலோசனைக்கான நிறுவனம் (உநவெசயட நபெiநெநசiபெ உழளெரடயnஉல டிநசநயர) கடந்த 2012 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தினை பெற்று நிர்மாணித்து வருகின்றது.

2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பூரணப்படுத்த தீர்மானிக்கப்பட்ட இக்கட்டிட வேலைகள்  2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கப்பட்டு தற்போது பூரணப்படுத்தப்பட்டு வருகின்றதாக தெரிவித்தனர்.

இக்கட்டிடம் எதிர்வரும் மே அல்லது யூன் மாதத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்விடத்திலேயே யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையம் அமையப்பெற்று இருந்ததுடன், பின்னர் இடம்பெற்ற யுத்தத்தினால் அது அழிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--