2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வட மாகாண சபை உறுப்பினராக சி.தவராசா நியமனம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 10 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண சபை உறுப்பினராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகருமான சின்னத்துரை தவராசா நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளதாக ஈ.பி.டி.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் உறுப்பினரொருவர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டதன் காரணமாக வடமாகாணத்தின் மாகாண சபையின் உறுப்பாண்மையின் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பதிலாக 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் படி 65 '1' ஆம் பிரிவின் கீழ் சின்னத்துரை தவராசாவை நியமித்திருப்பதாக நேற்று (09) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--