2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள்

Super User   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன், கி.பகவான்

சாவகச்சேரி நகரசபையினரும், சாவகச்சேரி பொலிஸாரும் இணைந்து தமிழ் - சிங்களப் புத்தாண்டினைக் கொண்டாடும் முகமான நடாத்திய  விளையாட்டு நிகழ்ச்சிகள் நகராட்சி மைதானத்தில் திங்கட்கிழமை (14) நடை பெற்றன.

கபடி, கரப்பந்தாட்டம், கயிறுழுத்தல், யானைக்கு கண்வைத்தல், முட்டி உடைத்தல், மரதனோட்;டம், துடுப்பாட்டம் உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் இந்நிகழ்வில் இடம்பெற்றன.

துடுப்பாட்டப் போட்டியில் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழக அணியும், கபடி ஆண்களில் கச்சாய் கலைமகள் அணியும், கபடி  பெண்களில் சாவகச்சேரி புனித  லிகோரியார் அணியும், கரப்பந்தாட்டத்தில் மட்டுவில் ஐங்கரன் அணியும், கயிறுழுத்தல் போட்டியில் கச்சாய் கலைமகள் அணியும் வெற்றிபெற்றன.

இந்நிகழ்வில் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யு.ஏ.கே.டி.வன்னியாராச்சி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வெற்றிபெற்றி அணி மற்றும் வீரர்களுக்கான பரிசில்களை வழங்கினார்கள்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--