2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

வைக்கோல் பட்டறை தீக்கிரை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா 

யாழ். ஈவினை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்த  வைக்கோல் பட்டறையொன்று திங்கட்கிழமை (14) இரவு இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதென்று அவ்வீட்டு உரிமையாளர் செவ்வாய்க்கிழமை (15) முறைப்பாடு செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வீட்டில்  02 வைக்கோல் பட்டறைகள் கடந்த 02 வாரங்களுக்கு முன்னர்  இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்ட வைக்கோல் பட்டறை ஒவ்வொன்றும் 15,000 ரூபா பெறுமதியானவையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--