2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

துண்டுப்பிரசுர விவகாரம்: ரி.ஐ.டி விசாரணை

Kogilavani   / 2014 ஏப்ரல் 18 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர் என்ற குற்றச்சாட்டில் கைதான இரு இளைஞர்கள் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு மாற்றப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொலிஸார் வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தனர்.

யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகில் 'தமிழீழம் மலரும்' என்ற தலைப்பில் அநாமதேய துண்டுப் பிரசுரத்தினை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24), இணுவில் பகுதியினைச் சேர்ந்த மன்மதராசா வேணுகாந்தன் (24) ஆகிய இருவரும் கோப்பாய் பொலிஸாரினால் வியாழக்கிழமை (17) கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த விடயத்தின் மேலதிக விசாரணைகளை பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொள்ளும் பொருட்டு குறித்த இருவரும் ரி.ஐ.டி யினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--