2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

இசுறு வேலைத்திட்டம் பூர்த்தியடைந்த இரண்டு பாடசாலைகள் திறப்பு

Super User   / 2014 ஏப்ரல் 22 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா

கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் இசுறு வேலைத்திட்ட வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு பாடசாலைகளின் பௌதீக வளப்பிரிவுகள் நாளை திறந்து வைக்கப்படவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் இன்று (22) தெரிவித்தார்.

வடமாகாணத்தில் 17 பாடசாலைகள் இசுறு வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டு அவற்றில் 16 பாடசாலைகளுக்கு தலா 35 மில்லியன் ரூபா நிதியும், கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு 50 மில்லியன் ரூபா நிதியும் வழங்கப்பட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த இசுறு வேலைத்திட்டத்தின் கீழ் வகுப்பறைக்கட்டிடம், ஆய்வுகூடம், தொழில்நுட்ப ஆய்வு கூடம் என்பன அமைக்கப்படும்.
அந்தவகையில் இந்த வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்த யாழ்.மாவட்டத்தின் இரண்டு பாடசாலைகள் திறந்து வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அந்தவகையில், புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி நாளை புதன்கிழமையும் (23), கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி நாளை மறுதினம் வியாழக்கிழமையும் (24) திறந்து வைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், இந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு பூர்தியடையும் தருவாயிலுள்ள சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி மற்றும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆகியன எதிர்வரும் மாதம் திறந்து வைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X