2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வடமாகாண கல்வி அபிவிருத்தி மாநாடு ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா


வடமாகாண கல்வி அபிவிருத்தி மாநாடு அம்மாகாண கல்வி அமைச்சர் தம்பிரசா குருகுலராஜா தலைமையில் யாழ். கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் புதன்கிழமை  (23) காலை ஆரம்பமாகியது.

வடமாகாணசபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதலாவதாக நடைபெறும்  இம்மாநாட்டில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன கலந்துகொண்டார்.

புதன்கிழமை (23) ஆரம்பமாகிய இம்மாநாடு,  வியாழக்கிழமையுடன் (24) நிறைவடையவுள்ளது. 

வடமாகாணத்தில் கடந்த 200 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் பாடசாலைக் கல்விப் பாரம்பரியத்தின் முக்கிய கட்டமாக இம்மாநாடு  அமையப்பெற்றுள்ளது.

இம்மாநாட்டில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--