2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

பேருந்தில் மோதி வயோதிபர் படுகாயம்

Super User   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கொடிகாமம் நுணாவில் பகுதியில் துவிச்சக்கரவண்டியுடன் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதியதில் துவிச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற வயோதிபர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் இன்று (23) தெரிவித்தனர்.

நுணாவிலைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை செல்வராஜா (80) என்பவரே படுகாயமடைந்தவராவார்.

வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த இவர், திரும்ப முற்பட்ட வேளையில் பேருந்து இவரை மோதியுள்ளது.

துவிச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற வயோதிபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--