2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மகள் கொல்லப்பட்டாள்: கொன்சலிற்றாவின் தந்தை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 23 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.குருநகர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து 14 ஆம் திகதி திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்ட எனது மகளான ஜெரோம் கொன்சலிற்றா (வயது 23) கொலை செய்யப்பட்டுள்ளார் என நான் சந்தேகிப்பதாக அவரது தந்தையான புனோரி ஜெரோம் வாக்குமூலமளித்துள்ளார்.

இந்த யுவதி தொடர்பிலான நீதவான் விசாரணை யாழ். நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் முன்னிலையில் புதன்கிழமை (23) நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு வாக்குமூலமளித்துள்ளார்.

ஜெரோம் கொன்சலிற்றா கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதற்கு யாழ்.ஆயர் இல்லத்தில் மறைக்கல்வியினைப் போதிக்கும் பாதிரியார்கள் இருவர் தான் காரணமென யுவதியின் பெற்றோர் கூறிவந்த நிலையில், இந்த சம்வம் தொடர்பான நீதவான் விசாரணை புதன்கிழமை (23) நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது யுவதியின் தாயாரான ஜெரோம் புஸ்பராணி  வாக்குமூலமளிக்கையில், 'எனது மகளின் மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் பாதிரியார்கள் இருவரே காரணம்' எனத் தெரிவித்தார்.

அவரது தந்தையான புனோரி ஜெரோம் சாட்சியமளிக்கையில், 'எனது மகள் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருக்கலாம்' என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மே மாதம் 12 ஆம் திகதி நடத்துவதாக நீதவான் அறிவித்தார்.

13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகரிலுள்ள தனது வீட்டிலிருந்து சென்ற யுவதி, சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து மறுநாள் திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்டார்.

மேற்படி யுவதியின் மரணத்திற்கு ஆயர் இல்லத்திலுள்ள பாதிரியார்களே காரணமென யுவதியின் உறவினர்கள் கடந்த புதன்கிழமை (16) ஆயர் இல்லத்தின் முன்பாக போராட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X