2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கைதி மரணம் : சிறைக்காவலருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 23 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்
 
யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியினை தாக்கி அவரது மரணத்திற்கு காரணமாகவிருந்த சிறைக் காவலரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று புதன்கிழமை(23) உத்தரவிட்டார்.
 
யாழ்.சிறைச்சாலையில் மல்லாகம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் கடந்த சனிக்கிழமை(12) சிறைக்காவலரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(22) இரவு உயிரிழந்துள்ளார்.
 
வாகன மோசடி வழக்கொன்றிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த களனிப் பகுதியினைச் சேர்ந்த கிருஸ்ணசுவாமி பாலகிருஸ்ண செட்டியார் (56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த கைதி நேற்று(22) உயிரிழந்ததையடுத்து, கைது செய்யப்பட்ட சிறைக்காவலர், இன்று(23) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--