2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

பொதுமக்கள் முறைப்பாட்டுக்குழு ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

வடமாகாணத்தில் வாழும் மக்களின் நன்மை கருதி வடமாகாண சபையின் ஏற்பாட்டில் 'வடமாகாண பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழு' ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வியாழக்கிழமை (24) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'வடமாகாண சபையின் 9 உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் முதலாவது அமர்வு இம்மாதம் 9 ஆம் திகதி நடைபெற்றது.

வடமாகாணத்திற்குட்பட்ட மக்கள் வடமாகாணத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அந்தந்த பிரதேசங்களிலுள்ள மாகாண சபை உறுப்பினர்கள் ஊடாகவோ அல்லது கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை அலுவலகத்திலோ அல்லது பேரவைச் செயலகம், வடமாகாண சபை, ஏ - 9 வீதி, கைதடி என்னும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அறிவிக்கமுடியும்.

கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் குறித்து மேற்படி குழு பரிசீலனை மேற்கொண்டு தொடர்ந்து அது தொடர்பான மேல் நடவடிக்கைகளில் ஈடுபடும்.

பொதுமக்கள் தமக்கு ஏற்பட்ட அநீதிகள், பாரபட்சம், பாதிப்புக்கள் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்'  என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--