2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

எதிர்க்கட்சித் தலைவராக தவராசா

Kogilavani   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.தவராசா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதால் ஜனாதிபதி தவராசாவினைத் தெரிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெகஷிசன் கொலை வழக்கில் கொலைக் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டு  வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்   கந்தசாமி கமலேந்திரன் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுளார்.

அத்துடன், அவர் ஈ.பி.டி.பியில் இருந்தும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டார்.

இதனால் எஸ்.தவராசா வடமாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு, அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் புதன்கிழமை (23) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையிலே அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X