2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

மீட்சித் திறன் வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிப் பட்டறை

Super User   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து 'மீட்சித் திறனை வளர்த்தல்' என்னும் தொனிப்பொருளிலான பயிற்சிப்பட்டறை நாளை வெள்ளிக்கிழமை (25) யாழ்.பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடாத்தவுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை தெரிவித்தார்.

இப்பயிற்சிப் பட்டறையில் இவ்வருட அனர்த்த முகாமைத்துவ கணிப்பு, யாழ். நகரத்தில் வெள்ளம் தேங்கி நிற்கும் கால்வாய்களைப் புனரமைப்பது போன்றன பற்றிய கணிப்புக்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டங்கள்  அனர்த்த முகாமைத்துவத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--