2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கைதடி சரஸ்வதி சனசமூக நிலையத்தின் முதலாவது வீடு கையளிப்பு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையத்தினால் தமது பிரதேசங்களில் இருக்கும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களிற்காக அமைக்கப்பட்டு வரும் 26 வீடுகளில் முதலாவது வீடு இன்று (25) பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர்களின் 4 இலட்சம் ரூபா நிதியில் புனரமைக்கப்பட்ட கிராமிய வீதிகள் மூன்றும் திறந்து வைக்கப்பட்டன.

கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையத்தின் புலம்பெயர் அங்கத்தவர்கள் தங்கள் இறந்த உறவுகளின் நினைவாக வழங்கிய நிதியுதவி மூலமும் இலங்கையிலுள்ள வசதி படைத்த அங்கத்தவர்களின் நிதியுதவி மூலமும் ஒவ்வொன்றும் 485,000 ரூபா பெறுமதியான 26 வீடுகள் அமைக்கப்பட்டு வந்தன.

இவற்றில் கட்டி முடிக்கப்பட்ட முதலாவது வீடு சனசமூக நிலையத்தின் 58ஆவது வருடக் கொண்டாட்டமான இன்று (25) பயனாளியிடம் வழங்கப்பட்டது. அத்துடன், சனசமூக நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லும் இன்று (25) நாட்டப்பட்டது.

சனசமூக நிலையத்தின் தலைவர் ப.செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் தென்மராட்சிப் பிரதேச செயலர் அ.சாந்தசீலன், சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் சி.துரைராசா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--