2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஓரு வாரத்தில் பன்னிரண்டு இலட்ச ரூபா பெறுமதியான உடமைகள் கொள்ளை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் கடந்த ஒரு வார காலத்தில் வீடுகள், வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு 12 இலட்சத்து 45 ஆயிரத்து 400 ரூபா பெறுமதியான உடமைகள் திருடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை(25) தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் இன்று(25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொக்குவில் கிழக்கு நந்தாவில் அம்மன் வீதியில் உள்ள வீடொன்றில் 8 இலட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபா பெறுமதியான உடமைகளும், யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள வியாபார நிலையமொன்றில் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும், யாழ்.நாவாந்துறைப் பகுதியிலுள்ள கடையொன்றில் 16,200 ரூபா பெறுமதியான பணமுமே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக அத்தியட்சகர் தெரிவித்தார்.

இந்தத் திருட்டுச் சம்பந்தமாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--