2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வியாபார நிலையத்தில் திருட்டு

Menaka Mookandi   / 2014 ஜூலை 03 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.மல்லாகம் நீதிமன்ற வீதியிலுள்ள வியாபார நிலையத்தின் பின்கதவுகள் புதன்கிழமை (02) அதிகாலை உடைக்கப்பட்டு, அங்கிருந்த 22 ஆயிரத்து 450 ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளரினால் புதன்கிழமை (02) முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெல்லிப்பளைப் பொலிஸார் வியாழக்கிழமை (03) தெரிவித்தனர்.

வியாபார நிலையத்திலிருந்த பால்மா பைக்கற்றுக்கள், சவர்க்காரங்கள் மற்றும் பிஸ்கட் பைக்கற்றுக்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .