2021 ஜனவரி 20, புதன்கிழமை

தாய்லாந்து செல்லும் ரூபவதி கேதீஸ்வரன்

Kogilavani   / 2014 ஜூலை 04 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

ஆசியாவின் அனர்த்த முன்னாயத்தநிலை நிலையத்தின் (ADPC) ஏற்பாட்டில் தாய்லாந்து, பாங்கொக்கில் நடைபெறவுள்ள அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வில் கலந்துகொள்வதற்காக கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நாளை சனிக்கிழமை (05) தாய்லாந்து பயணமாகவுள்ளார்.

அவருடன் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவு உதவிப் பணிப்பாளர் க.சுகுணதாஸும் உடன் செல்கின்றார்.

மேற்படி செயலமர்விற்காகச் இலங்கையிலிருந்து செல்லும் குழுவில் வடமாகாணம் சார்பாக இவர்கள் இருவரும் செல்கின்றார்கள்.

இந்தச் செயலமர்வானது எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து (07) இருந்து ஒரு வாரத்திற்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .