2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவருக்கு தண்டம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 23 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின்சாரம்  பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு நபர்களுக்கு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றினால் தலா 10 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டயீட்டை செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸாரும் இலங்கை மின்சார சபையினரும் இணைந்து அக்கரைப்பற்று பதுர் நகர்ப் பிரதேசத்தில் நேற்று (22) புதன்கிழமை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மந்தப்பட்ட நபர்களை ஆதாரங்களுடன்; அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில்,  இன்று (23) வியாழக்கிழமை ஆஜர்படுத்திய மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .