2021 மார்ச் 08, திங்கட்கிழமை

யாழில் சொத்து முகாமைத்துவ நிறுவனம் திறப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 27 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகாசொத்து முகாமைத்துவ நிறுவனமான கீபேங்க் அசெட் மெனேஜ்மன்ட் லிமிடெட்டின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் திறப்புவிழா இலங்கை வங்கி யாழ். தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (27) நடைபெற்றது.

இந்த நிறுவனமானது 1991இல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் பிரதான பங்குதாரராக இலங்கையிலுள்ள வணிக வங்கிகளில் ஒன்றான இலங்கை வங்கி விளங்குகின்றது.

இந்நிறுவனம், பங்குச்சந்தை நிதியங்களினூடாக மூலதன வளர்ச்சி, வருமானத்தை அடைவதற்கான உத்தரவாதக்கடன் நிதியங்கள் மற்றும் பணச்சந்தை நிதியங்களினூடாக நிலையான வருமானத்தை உழைக்கும் வாய்ப்பினையும் முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றனர்.

அத்துடன், இந்நிறுவனம் அலகும் பொறுப்பாட்சி நிதியங்களை முகாமை செய்வதில் 20 வருட கால அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை கொண்டுள்ளது. 

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர் இலங்கை வங்கியின் பொது முகாமையாளரும் கீபேங்க் அசெட் மெனேஜ்மன்ட் இயக்குனர் சபை உறுப்பினருமான எம்.குணசேகர, இலங்கை வங்கியின் வடமாகாண துணை பொது முகாமையாளர்; எஸ்.நந்தகுமார், இலங்கை வங்கியின் வட மாகாண செயற்பாட்டு முகாமையாளர் என்.மாணிக்கசிங்கம், முன்னாள் செயற்பாட்டு முகாமையாளர் என்.உலகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .