2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண சபையினர்களுக்கு மருத்துவ பரிசோதனை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், யோ.வித்தியா


வடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கைதடியிலுள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியிலேயே இந்த மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றன.

வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த மருத்துவ பரிசோதனையில், உயர் குருதி அமுக்கம், கண் பார்வை, உயரம், நிறை, இரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் இடம்பெற்றன.

இந்த பரிசோதனைகளை யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிமனையினர் மேற்கொண்டனர்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெறவுள்ளது. அமர்வு ஆரம்பமாக முன்னரே இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த வைத்திய பரிசோதனை குறித்து யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கருத்துக் தெரிவிக்கையில்,

தொற்றாத நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை இலங்கை பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் தங்களை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி கொள்ள முடியும்.

இருந்தும், யாழ்.மாவட்டத்திலுள்ளவர்கள் நோய் ஏற்பட்ட பின்னரே வைத்தியசாலைகளுக்கு வருகின்றனர். முன்னதாக வந்து பரிசோதனைகளை மேற்கொள்வது கிடையாது.

அந்தவகையில் அவ்வாறானவர்களை நோய் ஏற்படமுன்னரே வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தும் நோக்குடன் இந்த மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .