2021 மே 06, வியாழக்கிழமை

அதிகாரிகள் பயந்தநிலை மாறிவிட்டது: ஐங்கரநேசன்

George   / 2015 ஜனவரி 28 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்


வடமாகாணத்திலுள்ள அரச அதிகாரிகள், கட்டளையின் நிமித்தம் அச்சமான சூழலில் முன்னர் கடமையாற்றியிருந்தனர். 

இதனை தான் அனுபவத்தின் மூலம் கண்டறிந்ததாகவும் ஆதலால் அவர்கள் மீது குறைகூறுவதற்கு தான் விரும்பவில்லையென வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், அலுவல் நிமித்தம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளரைச் சந்திப்பதற்காக 2 மாதங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்துக்கு சென்றிருந்தேன். 

நான் அவரைச் சந்திக்க சென்றபோது, அவர் என்னை உட்காரும்படி கூறவில்லை. நான் என்னை யார் என அறிமுகப்படுத்திய போதும் அவர் என்னை உட்காரக்கூறவில்லை.

என்ன விடயம் என்றாலும் தொலைபேசியில் கேட்டிருக்கலாமே! ஏன் நேரில் வந்தீர்கள்? என பதிவாளர் என்னிடம் வினாவினார். என்னை அவர் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளார் என்பதை அப்போது அறிந்தேன்.

என்னை உட்கார வைத்து கதைத்தால், பலருக்கு தான் பதில் சொல்லவேண்டி வரும் எனவும், ஏன், எதற்காக வந்தார், என்ன கதைத்தார் என்ற விளக்கங்களை கூறவேண்டி வரும் எனவும் ஆதலால் உட்காரக்கூறவில்லையென பதிவாளர் கூறியிருந்தார்.

அப்போது  புரிந்துகொண்டேன் அரச அதிகாரிகள் ஒரு நிர்ப்பந்தத்தின் கீழ் பயந்த நிலையில் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் பணியாற்றி வந்துள்ளனர். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. அரச அதிகாரிகள் எங்களுடன் எவ்வித பயமும் இன்றி சகஜமாகப் பழகுகின்றனர் எனக் ஐங்கரநேசன் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .